உங்களுக்கும் மூட்டுவலி பிரச்சனையா அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து வாரத்தில் இரண்டு நாட்கள் துவையல் செய்து சாப்பிட்ட நம் உடல் இழந்த நுண் சத்துகள் (micro nutrient) சமன்செய்யப்பட்டு வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வும் அறவே இல்லாமையை உணரலாம்.
பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்.
பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்……
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டையை துவையல் செய்து அதனுடன் உப்பை பயன்படுத்தினால் வலி பெரும்பாலும் இருக்காது மேலும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாடு இருப்பின் இதுவே அரு மருந்து ஆகும் …..
பிரண்டையால் நிறைய குறைபாடுகள் குணமாகும்போது நாம் ஏன் கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழக்கி கொள்ள வேண்டும் யோசிங்க…..
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும் உலகிலேயே கடினமான பொருள் வைரம்தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது …
இதற்கு மற்றொரு பெயர் உணடு “வஜ்ஜிரவல்லி” தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவாே…..!
– வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..