வீட்டு வேலை சரியா செய்யமாட்டியா… அத்தை திட்டியாதால் சிறுமி செய்த விபரீதம்..!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பழனிச்சாமி- அமுதா இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மகள் இருக்கிறாள். இந்தநிலையில் பழனிச்சாமியின் தங்கை மகளான சந்தியா பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அவர்களுடைய வீட்டில் தங்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் தையல் வேலை பழக சென்று வந்துள்ளார். அப்போது புவனேஸ்வரி சந்தியாவை வீட்டு வேலைகள் சரியாக செய்யவில்லை என்று திட்டியுள்ளார்.
இதனால் சோகத்தில் மனமுடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்டார் . இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிசாமி குடும்பத்தினர் அருகில் இருந்தவர்கள் உதவியோடு சந்தியாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பெருந்துறை போலீசார் சந்தியாவின் உடலை பிரேத பரிசோதக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து பழனிசாமி குடும்பத்தினரிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்