பணம் தரியா இல்லை ஆபாசமா போட்டோ வெளியிடவா…? பைனான்சியரால் பாதிக்கப்பட்ட குடும்பம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அடுத்த நாராயணபுரம் பகுதியில் சேர்ந்த லட்சுமணன் மகன் சக்தியநாராயணன் (46) இவருக்கு சுகந்தி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் 17 வயதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் பிள்ளை உள்ளது இந்த நிலையில் சக்தியநாராயணன் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீட்டு லோனுக்காக ஐந்து லட்ச ரூபாயை திருப்பத்தூர் பகுதியில் உள்ள கிராம சக்தி தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வாங்கியுள்ளார்.
இதுவரை ஒரு கணிசமான தொகை கட்டியுள்ள நிலையில் இன்னும் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியதாக தெரிகிறது. இதன் காரணமாக அவ்வப்போது பைனான்ஸ் கம்பெனியின் ஊழியர்கள் சக்தி நாராயணனின் வீட்டிற்கு வந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நேற்று பைனான்ஸ் ஊழியர்கள் நாராயணன் வீட்டிற்கு வந்து திரும்பவும் பணத்தை கேட்கும் பொழுது உனது மனைவி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி தங்களுடைய பணத்தைக் கட்டுமாறு ஆபாசமாக திட்டியதாகவும் மேலும் தனது மகளை வீடியோவாக எடுத்து வெளியே நடமாட விடமாட்டோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பைனான்ஸ் ஊழியர்கள் சத்தியநாராயணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மயக்கமடைந்த சத்யநாராயணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சத்திய நாராயணனை பைனான்சியர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த சம்பவம் குறித்து குரிசிலப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தர்மபுரி பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜீவகிருஷ்ணன் (37) மற்றும் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி பகுயை சேர்ந்த தனபால் மகன் தனுசக்தி (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..