இரவு நேரத்தில் டீ, காபி குடித்தால்..? இவ்வளவு பிரச்சனையா..!!
நாடு முழுவதும் டீ, காபி பிரியர்கள் ஏராளமாக இருகிறார்கள்.. டீ அருந்துவதற்கு என்று ஒரு நேரம் இருக்கிறது.. எல்லாம் நேரங்களிலும் டீ குடித்தால்.. என்ன என்ன விளைவு ஏற்படுத்தும் என்பது பற்றி பார்க்கலாம்.
டீ காபி பிரியர்கள் பலருக்கும், டீ, காபி குடிக்க வில்லை என்றால் வேலையே இயங்காது. ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடனும், இரவு தூங்குவதற்கு முன்னும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனால் உடல் தான் அதிகம் பாதிப்பு அடைகிறது.
சாப்பிட்டவுடன் டீ, காபி குடிப்பதால் சாப்பிட்ட உணவு, செரிமானம் ஆகாமல் போய் விடும். இரவு நேரத்தில் டீ, காபி குடிப்பது தூக்கமின்மையை கெடுத்து விடும், இதனால் கண்களில் கருவளையம் மற்றும் முகத்தில் பரு ஏற்படுகிறது.
தொடர்ச்சியாக ஒரு நாளைக்கு 3 முறைக்கு அதிகமாக டீ, காபி குடித்தால் அதுவே நம்மை அடிமையாக்கிவிடும். தலைவலி ஏற்படும் பொழுது டீ, காபி குடிக்கலாம். காலை ஒரு முறை மாலை ஒருமுறை என டீ, காபி குடிப்பது உடலையும் கட்டுப்பாடுடன் வைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி.