இரவு நேரத்தில் கொழுப்பைக் கரைக்க இதை ட்ரைப் பண்ணுங்க்…
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கக்கூடியது இந்த கொள்ளு.
வாரத்தில் நான்கு நாட்கள் இந்த கொள்ளு சூப்பை சாப்பிட்டால் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் அனைத்தும் கரையக்கூடும்.
ADVERTISEMENT
தேவையான பொருட்கள்
கொள்ளு- 50 கிராம்
பூண்டு- 2 பல்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
மிளகு- ஒரு ஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
சால்ட்- தேவையான அளவு
செய்முறை
ஒரு இரும்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக்கொண்டு அதில் கொள்ளு போட்டு நிறம் மாறும் வரை லேசாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அதனை ஒரு பிளேட்டில் கொட்டி ஆர வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே இரும்பு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை கொள்ளுவுடன் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு பொடிக்க வேண்டும். இப்போது கொள்ளுப்பொடி தயார். 6 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது இந்த பொடி.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதில் ஒரு பல் பூண்டை துருவி அத்துடன் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மிளகு, சீரக, கொள்ளுபொடியை 2 ஸ்பூன் அளவுக்கு சேர்க்க வேண்டும்.
இதனை கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை சிறிய தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து வந்த பிறகு இதனை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி அதில் சிறிதளவு சால்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது வெயிட்லாஸ் செய்ய நைட் ட்ரிங் ரெடி. இந்த சூப்பை இரவு உணவு சாப்பிட்ட பிறகு இளம் சூட்டில் பருகிவர வேண்டும். வாரத்திற்கு நான்கு நாட்கள் குடிக்கலாம். கொள்ளு சூடு என்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் எடுத்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.