“5ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் பணம்..” வாட்ஸ் ஆப்பில் வரும் செய்தி..! சைபர் கிரைம் அதிரடி..!
திருப்பூரை சேர்ந்த செல்வம் என்ற நபர் whatsapp, telegram போன்ற சமூக வலைத்தளம் மூலம் பார்ட் டைம் ஜாப் மேப் ரிவ்யூ ( Part Time Job Map Review ) செய்து பைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி கோவையைச் சேர்ந்த அனுப் என்பவரது வங்கிக் கணக்கிற்கு 17 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
முதலீடு செய்த நாளிலிருந்து சிறிது நாட்கள் மட்டுமே லாபத் தொகையாக பணம் பெறப்பட்ட நிலையில் சிறிது நாட்கள் கழித்து பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.., இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த செல்வம் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் வாட்ஸ் அப் மூலம் பார்ட் டைம் ஜாப் என்றும் அதில் மேப் ரிவியூ செய்து 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து டாஸ்காக செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என தெரிவித்தனர். அதனை நம்பி 17,29,000 ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளார். அதில் தன்னை ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் செல்வம் பணம் அனுப்பியதாக கூறப்படும் வங்கி கணக்கு விபரங்களை சேகரித்துள்ளனர். அந்த வங்கி கணக்கு உரிமையாளரான கோயம்புத்தூரை சேர்ந்த அனூப் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர் நஜுமுதீன் , சையது ரஹ்மான் மற்றும் இமான் பாஷா ஆகிய மூன்று பேரின் வங்கி கணக்குகளை பணம் கொடுத்து பெற்றுள்ளார். இவரது உறவினர் துபாயில் இருந்தவாறு டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் டாஸ்க் முறையில் முதலீடு செய்ய வலியுறுத்தி போலி விளம்பரங்களை அனுப்பியுள்ளார்.
இதில் ஏமாறுபவர்கள் பணத்தை, பணம் கொடுத்து வாங்கும் வங்கி கணக்குகளில் பெற்றுள்ளார். இதன் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டால் கணக்கின் உரிமையாளர்கள் மாட்டிக் கொள்வார்கள் எனவும் நாம் தப்பிக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர்.
இதுபோல் ஏராளமானவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கிக் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 செல்ஃபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் துபாயில் உள்ள நபர் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..