உங்களோட முகத்துல கருவளையம் இருக்கா அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..!
எப்பொழுதும் பிஸியாக இருக்கும் இந்த சமூகத்தில் நம்மள நம்ம கேர் பண்றதே மறந்து போய்டுறோம். அதனால் நமக்கு அதிகமான பிரெச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. அதிலும் முக்கியமான ஒன்று “work pressure”.
பணி சுமையால் வரும் கருவளையம். இந்த கருவளையத்தை போக்க இயற்கையான சில டிப்ஸ்:
டீ பேக்:
தினமும் டீ பேக்கை தண்ணீரில் நன்கு ஊற வைத்து அதன் பிறகு அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்பு அதனை கண்களின் மேல் 10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வைத்து வந்தால், அந்த டீ தூளில் உள்ள “காஃபின்” என்ற மூலக்கூறு சீரான ரத்த ஓட்டத்தை சருமத்திற்கு அளித்து முகம் பொலிவாகவும் மற்றும் கண்களின் கீழ் உள்ள கருவளையத்தை போக்கவும் உதவுகிறது.
கற்றாழை:
தினமும் இரவில் தூங்குவதற்கு முன் கற்றாழை ஜெல்லை கண்களின் கீழ் உள்ள கருவளையத்தில் தடவி பின் அதனை இரவு முழுவதும் வைத்திருந்து காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இப்படி செய்து வருவதால் கண்களின் கீழ் உள்ள கருவளையங்கள் நாளைடைவில் மறைந்து போகும். இதனை இரவு நேரம் முழுவதும் வைத்திருக்க விரும்பாதவர்கள் கற்றாழை ஜெல்லை கண்களின் கீழ் பகுதியில் தடவி அதனை 5 நிமிடம் முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்து பின் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த கற்றாழை ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் எளிதில் கருவளையம் மறைய கூடும்.
கற்றாழை மிகவும் குளிர்ச்சி தன்மை கொண்டதால்.., கர்ப்பிணி பெண்கள் இதை மட்டும் தவிர்க்கலாம்.
ரோஸ் வாட்டர்:
இந்த ரோஸ் வாட்டரை நம் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை சிறிது நீரினால் நனைத்து எடுத்த பருத்தி துணியால் துடைக்க வேண்டும்.
பின் அந்த ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை ரோஸ் வாட்டர் முகத்தில் இருக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிபடியாக கருவளையம் மறைந்து முகம் என்றும் பொலிவாக இருக்கும்.
குளிர்ந்த பால் :
மேற்கண்ட ரோஸ் வாட்டர் டிப்ஸ் போலவே முகத்தில் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். பின் முகத்தில் காட்டன் துணி கொண்டு பாலை அப்ளே செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்வதால் கண்களின் கீழ் உள்ள கருவளையம் ஆனது மறைந்து போகும், மற்றும் பாலில் உள்ள லாக்டோஸ் நம் முகத்தை பொலிவாக வைக்கும்.
முக்கிய குறிப்பு:
பாலினால் ஏற்படும் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த டிப்ஸை பயன்படுத்தாமல் மேற்கண்ட மூன்று டிப்ஸ்களை ட்ரை செய்யலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.