மதுவை புறக்கணித்தால் மது விலக்கு வந்துவிடும்..! துரைவைகோ பேச்சு..!
மதுரையில் நடைபெற்ற தொண்டரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற எம்பி துரை வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது..
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டிக்கத்தக்க ஒரு செயல். காவல்துறை மற்றும் தமிழக அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கொலை அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றதா, இல்லை தனிப்பட்ட காரணத்திற்காக நடைபெற்றதா என போலீஸ் விசாரணைக்கு பின் தான் தெரிய வரும். தமிழகம் கலவர பூமியாக மாறுகிறது என்று சிலர் கூறுகிறார்கள், பாஜகவின் சில தலைவர்கள் சில கருத்துக்களை சொல்லி உள்ளார்கள். பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற தான் செய்கிறது. அங்கெல்லாம் இதுபோன்ற செயல் நடைபெறவில்லையா..?
பூரண மதுவிலக்கு உள்ள குஜராத், உத்தர் பிரதேசத்தில் கூட கள்ளச்சாராயம் மரணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது குறித்து மக்களுக்கு தான் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மக்கள் ஒன்று கூடி போராட்டங்கள் நடத்தினால் மதுக்கடைகளை யாராலும் திறக்க முடியாது. மதுவை யாரும் கட்டாயப்படுத்தி குடிக்க சொல்லுவதில்லை. மதுக்கடைகளை மக்கள் தான் புறக்கணிக்க வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதால் பாஜகவிற்கு பலம் என சொல்லாம்.., இதனால் பாஜக மதவாத சக்திகளை ஏற்படுத்தும். தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு மாற்று அதிமுக என்று தான் சொல்லுவார்கள். எனவே அதிமுக தேர்தலை புறக்கணிக்க கூடாது
நான் தற்போது தான் பொதுவாழ்விற்குள் வந்துள்ளேன்.. நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அதை ஒரு நினைவூட்டலாக கொண்டு இது தொடர்பாக முதலமைச்சரிடம் நான் பேசுவேன் என அவர் கூறினார்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..