ஆவிபிடிப்பதில் இத்தனை நன்மைகளா…!!! ஹீரோயின் மாறி ஆயிடுவிங்க…!!
சருமத்தில் உள்ள அழுக்கு செல்களை அகற்றுவதற்கு ஆவி பிடித்தல் மிகவும் ஏற்றது. ஆவி பிடித்து முடித்ததும், சருமத்தை சுத்தமான துணியால் துடைத்தால், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் சுலபமாக வந்துவிடும்.
சளி தொந்தரவு, உடல் அசதி, ஜலதோஷம், தலைவலி மற்றும் இருமல் ஆகியவை இருந்தால் ஆவிபிடிப்பது நல்ல மாற்றத்தை தரும்.
காலை மற்றும் தூங்குவதற்கு முன் என சிறிது நேரம் பிடித்து விட்டால் இப்படிப்பட்ட நோய்கள் உடனே குணமாகிவிடும்.
* மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் விரைவில் வந்துவிடும். இதற்கு ஒரு 5 நிமிடம் ஆவிபிடித்துவிட்டு துணியால் துடைத்தால் போதும் கருப்புள்ளிகள்,வெள்ளை புள்ளிகள் எளிதில் வந்துவிடும்…
* முதுமை தோற்றதை தடுக்கும். எப்படியென்றால், சருமத்தில் அழுக்குகள் அப்படியே தங்கியிருந்தால் தான், முகம் பார்ப்பதற்கு மிகவும் முதுமை தோற்றத்தில் காணப்படும், இதனால் ஆவிபிடிக்கும் போது சரும துளைகளில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாகவும் அழகாகவும் காணப்படும்.
* பருக்கள் இருக்கும் சமையத்தில் முகத்திற்கு ஒரு 5 நிமிடம் மட்டுமே ஆவி பிடிக்க வேண்டும் . பின் கொஞ்ச நேரம் அழித்து பனிக்கட்டியைக் கொண்டு முகத்தில் தேய்த்து வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
*ஆவி பிடிப்பதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சருமத் துளைகள் நன்கு சுவாசிக்கும். துளைகளில் அழுக்குகள் தங்காது இதனால் சருமம் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாகவும் பொலிவாகவும் இருக்கும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.