செவ்வாய் கிழமை அன்று இந்த வழிபாடு செய்தால் நன்மை கிடைக்கும்..!!
மனம் நிறைய மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்று ஆசை படாத மனிதர்களே இல்லை..
அப்படி செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழ, சில வழிபாடு செய்தால் போதும். உங்கள் இல்லத்தில் கடன் சுமைகளும் நீங்கி வீடும்.
வாரந்த தோறும் செவ்வாய் கிழமை அன்று, அம்பிகையை நினைத்து விரதம் இருந்து, வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்.
செவ்வாய் கிழமை தமிழ் கடவுள் முருகனுக்கும் உகுந்த நாள். எனவே இந்த நாளில் மௌன விரதம் இருந்து வழிபட்டால் அனுஷ்டித்தால் யாகம் செய்வதற்கு நிகர் ஆகும்.
திங்கள், புதன், வியாழன், வெள்ளி எப்படி நல்ல காரியங்கள் செய்வதற்கு சிறந்த நாளாக விளங்குகிறதோ, அதேப் போல் செவ்வாய் கிழமையும் நல்ல காரியம் செய்வதற்கு சிறந்த நாள் தான்.
9 நவ கிரகங்களில் செவ்வாய் ஆனது மங்களம் என்று சொல்லப்படுகிறது.
செவ்வாய் கிழமை அன்று “எதையும் செய்ய விரும்பாதவர்கள், வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள் “. என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர்.
ஆனால் செவ்வாய் கிழமை அன்று இந்த சில காரியங்களை மட்டும் செய்யக் கூடாது.
1) செவ்வாய் கிழமை அன்று கடன் வாங்க கூடாது.
அப்படி கடன் வாங்கினால் கடன் தொடரும் என்று சொல்லுவார்கள்.
2) செவ்வாய் கிழமை அன்று வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்யக் கூடாது.
3) தலை முடி வெட்டுதல், நகம் வெட்டுதல், சேவிங் செய்வது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
4) செவ்வாய் கிழமை நகை விற்கவோ, அடகு வைக்கவோ கூடாது.
மேற்கண்ட விஷயங்களை செவ்வாய் கிழமை அன்று செய்யாமல் இருந்தாலே.., செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம்.
மேலும் இதுபோன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
– வெ.லோகேஷ்வரி