வாழைப்பழத்துடன் இதனை வைக்கறீங்களா..? வேண்டாம்..!
பட்டாணி சூப் செய்யும்போது ஒரு அவல் வறுத்து பொடியாக அரைத்து சேர்த்தால் கெட்டியான சூப் கிடைக்கும்.
புளிக்குழம்பு செய்யும்போது கடைசியாக வறுத்த மிளகு, சீரகம் அரைத்து சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும்.
உப்பில் நீர் சேர்ந்துவிட்டால் அதில் சிறிது அரிசியை போட்டுவைக்க ஈரம் குறையும்.
வாழைப்பழத்தில் வெளிபடும் வாயுக்கள் அதனுடன் வைக்கும் மற்ற பழங்களையும் சீக்கிரம் பழுக்க வைத்துவிடும் அதனால் வாழைப்பழத்தை தனியே வைக்கவும்.
சீடை பலகாரம் செய்யும்போது அதனை ஊசியை வைத்து குத்திய பிறகு எண்ணெயில் பொரித்தால் அது வெடிக்காது.
காபி போடும்போது டிகாஷன் சீக்கிரம் இறங்குவதற்கு சூடான தண்ணீரில் அதனை வைக்க சீக்கிரம் இறங்கிவிடும்.
காய்கறிகள் மற்றும் அரிசியை கழுவிய தண்ணீரை கீழே ஊற்றாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக வளரும்.
பூசணிக்காயின் உள் இருக்கும் சவ்வு பகுதியை கீழே போடாமல் தோசை மாவில் சேர்த்து அரைக்க சுவை அருமையாக இருக்கும்.
சுண்டல் கெட்டுபோகாமல் இருக்க அதில் கொப்பரை தேங்காய் துருவி வதக்கி சேர்க்க சுவை கூடுதலாக இருக்கும்.
முந்திரி, பாதாம் இரண்டையும் ஊறவைத்து அரைத்து தேங்காய் பர்பியில் சேர்த்து செய்தால் சுவை கூடுதலாகவும் பர்பி உதிராமலும் இருக்கும்.
எலுமிச்சை சாதம் செய்ய சாதத்தை வடித்து அகலமான பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிளறி ஆறவைத்த பின்னர் செய்தால் உதிரி உதிரியாக வரும்.