நடிகர் விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் தான் தெறி. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியடைந்தது. இதனால் தான் நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் தனது இயக்குனராக அட்லீயை தேர்வு செய்தார்.
பொதுவாக தமிழில் ஒரு படம் வெற்றியடைந்தால் அந்த படத்தின் உரிமத்தை வாங்கி மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது சினிமாத்துறையில் வழக்கமான ஒன்று இதனால் விஜயின் தேறி படத்தையும் தெலுங்கில் ரிமேக் செய்ய திட்டமிட்டனர். இந்த படத்தை தெலுங்கில் ஹரிஷ் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தெலுகு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து வந்தது.
இந்நிலையில் விஜயின் தெறி படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் கடிதம் எழுதியுள்ளது வைரலாகி வருகிறது. பவன் கல்யாண் தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வருவதால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் மற்றொரு ரீமேக் படத்திலும் அவர் நடிக இருப்பதால் அதிருப்தி அடைந்த ரசிகர் ஒருவர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார். ஒரு படத்திற்காக தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருக்கும் இந்த கடித்ததால் சினிமாதுறை திகைப்பில் உள்ளது.