ஐஐடி பெண்கள் கழிவறையில் வீடியோ எடுத்த பேராசிரியர்; அதிர்ச்சியில் மாணவிகள்

சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த பேராசியரை கோட்டூர்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை ஐஐடியில் உள்ள விண்வெளி பொறியியல் துறை ஆய்வுக்கூடத்தில் பெண்கள் கழிவறை உள்ளது. அதனுள் ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த இணை பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் பெண்கள் கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த மாணவி, கழிவறையில் தண்ணீர் குழாய்க்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை கண்டுபிடித்து, சுபம் பானர்ஜியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர், சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பேராசிரியர் சுபம் பானர்ஜியை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பல நாட்களாக பெண்கள் கழிவறையில் செல்போன் மறைத்து வைத்து அவர் வீடியோ எடுத்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் பேராசிரியர் சுபம் பானர்ஜியின் லேப்டாப்பையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

மோசடி புகார் – செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை – சபாநாயகர் தனபால் அதிரடி