இம்சை செய்யும் இளையராஜா..! வெச்சி செய்யும் வைரமுத்து..!
தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களின் ஒருவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தில் இசையமைக்க தொடங்கிய இவர் இன்றுவரை தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற பாடல்களை கொடுத்து வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் களம் இறங்கியுள்ளார்.
தமிழ்த் திரையுலங்கின் புகழ் பெற்ற பாடலாசிரியர் மற்றும் கவிஞரான இவர் பொன்மாலை பொழுது என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர்கள் இருவரும் இணைந்து 6 ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் ஒன்றாக பணியாற்றினார்கள். அதன் பின்னர் இருவருக்கும் மோதல ஏற்பட தொடங்கியது. அந்த பிரச்சனைகள் அவ்வப் போதே நம் காதுகளுக்கு வந்து மறைந்து விடும். ஆனால் சில வாரங்களுக்கு முன் இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை தற்போது வரை தொடர்ந்து பூதகரமாக வெடித்து வருகிறது.
தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என தொடர்ந்து இளையராஜா கூறி வந்தார். ஆனால் 96 திரைப்படத்தில் தொடங்கிய இந்த விவகாரம் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி மற்றும் மலையாள திரைப்படமான மஞ்சுமால் பாய்ஸ் படம் வரை தனது பாடலை படத்தில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க கவிஞர் வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது இசையும் பாடல்வரிகளும் ஒன்றாக இணைந்தால் தான் நல்ல பாடல் உருவாகும் சில நேரங்களில் இசையைவிட மொழி சிறந்ததாகத் திகழும். இதை புரிந்து கொண்டவர்கள் ஞானி என்றும் புரிந்து கொள்ளாதவர்கள் அஞ்ஞானி என்று கூறியதை அடுத்து இது இளையராஜாவை தான் மறைமகமாக பேசியிருக்கிறார் என சிலர் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இதனால் தொடங்கிய பிரச்சனை இன்று வரை ஓயவில்லை. இந்நிலையில் இளையராஜாவின் மகனான கார்த்திக் ராஜா இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கார்த்திக் ராஜா மேடையில் உறையாற்றிய போது அவரிடம் இசை பெரியதா..? அல்லது மொழி பெரியதா..? என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் மக்களுக்கு எது பிடிக்கிறதோ அதுதான் பெரியது என்று வித்தியாசமான பதிலை கூறியுள்ளார்.
மேலும் இசை யுனிவர்ஸ்னா அதில் எங்க அப்பா மவுண்ட் எவரெஸ்ட் என்றும் இசைத் துறையில் அவர் சாதித்தது மிகப்பெரியது என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கார்த்திக் ராஜா தனது கருத்தை காட்டமாக முன் வைத்துள்ளார்.
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..