கடத்தப்பட்ட மணமகள் இளமதி சேலம் மேட்டூர் காவல்நிலையத்தில் ஆஜர்!

காதல் திருமணம் செய்துகொண்டதால் 40 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்ட மணப்பெண் இளமதி சேலம் மேட்டூர் காவல்நிலையத்தில் ஆஜரானார்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செல்வன், இளமதி ஆகிய இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு வர இருவரும் திராவிட விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செல்வன், அந்த இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரன் உதவியோடு சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

அன்று இரவே கார்கள் மற்றும் பைக்குகளில் வந்த சுமார் 40 பேர் கொண்ட கும்பல் திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி காரில் ஏற்றிச் சென்றனர். மேலும் புதுமாப்பிள்ளையை தாக்கிவிட்டு மணமகள் இளமதியையும் கடத்திச் சென்றனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியின.

பின்னர் காவல்துறையினர் மணமகன் செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரையும் மீட்டனர். ஆனால் மணமகள் இளமதி கிடைக்கவில்லை. மேலும் மணமகன் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

கடத்தப்பட்ட இளமதியை போலீசார் தேடி வந்தனர். மேலும் #இளமதி_எங்கே என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இந்நிலையில் காணாமல் போன இளமதி, சேலம் மேட்டூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் ஆஜரானார். அவர் எங்கு சென்றார் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

-1 points
Upvote Downvote

தொப்பி, தாடி வச்சிருந்தா தீவிரவாதியா? – வேல்முருகன் பாய்ச்சல்

‘கொரோனா வைரஸ் எதிரொலி’ உச்சநீதிமன்றத்தின் அதிரடி முடிவு!