பிரேம் ஜி திருமணத்தில் கலந்துகொள்ளாத இளையராஜா..! முகம் சுளிக்க வைக்கும் காரணம்…!
பிரேம் ஜி:
இவர் நடிகர், பாடகர்,
இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார்.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் இவர் என்னா கொடும சார் இது என்ற வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமானர்.
பிரேம் ஜி திருமணம்:
கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட் பிரபு தம்பியுமான பிரேம்ஜிக்கு கடந்த 9ம் தேதி திருத்தனி முருகன் கோவிலில் திருமணம நடைப்பெற்றது.
இந்த திருமணத்தில் கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில், அவர்களின் நெருங்கிய உறவினரான இளையராஜா கலந்து கொள்ளமல் இருந்ததை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் ” பிரபல பத்திரைக்கையாளர் ஒருவர் இளையராஜா கலந்துகாமல் இருந்த காரணம் குறித்து பேசியுள்ளார்.
இளையராஜா வராமல் இருந்த காரணம்:
இது குறித்து அவர் பேசும் பொழுது, “இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் இடையே கடந்த ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பாகவே பிரச்சினை ஏற்பட்டது.
காரணம் எல்லாம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை. இளையரஜா இசையமைத்த பாடலை பொது வெளியில் கங்கையமரன் பாடியதால்தனது அனுமதியின்றி பாடியதால் அதற்கு உண்டான ராயல்டி தொகையை கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டுள்ளார்.
இப்படி பணத்தை சேர்த்து என்ன செய்யப் போகிறாய் என்று கொந்தளித்துள்ளார் கங்கையமரன். இது இளையராஜாவிற்கு கடுமையான கோபத்தை உண்டாக்கியது.
இளையராஜாவைப் பொறுத்தவரை, சாதாரண சண்டையாக இருந்தலே கிட்டதட்ட ஒரு வருடம் கூட பேசாமல் இருப்பார். அப்படி இருக்கும் பொழுது, இப்படிப்பட்ட ஒரு பெரிய பிரச்சினை பூதாகரமாக இரக்கும் பொழுது இளையராஜா பேசுவாரா என்ன? இது தவிர அவரது மகள் பவதாரணி வேறு அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
அப்போது கங்கை அமரன் வீட்டில் இருந்து கொண்டே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.
இது தவிரவும் அவர்களுக்குளாக முட்டல் மோதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்