நான் எப்பவும் “ஹாட்” தான்..!! பிரியாமணி சொன்ன அந்த வார்த்தை..?
பாரதிராஜா படத்தில் அறிமுகமானவர் ப்ரியாமணி தொடர்ந்து அது ஒரு கனா காலம் என்ற படத்தில் பாலுமகேந்திரா இயக்கத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தனது கரியரின் தொடக்கத்திலேயே இரண்டு பெரும் ஜாம்பவான்களின் இயக்கத்தில் நடித்து திரையுலகில் கவனம் ஈர்த்தார்.
கார்த்தியின் மேல் காதல் வசப்படுவது, வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து யாருக்கும் அஞ்சாமல் நடித்து நடிப்பின் நாயகியாக மிரட்டியிருப்பார். க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்திருப்பார். இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
பருத்திவீரன் படத்தில் தேசிய விருது கிடைத்ததால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓராண்டிற்கு மட்டுமே படவாய்ப்பு அமைந்தது. தெலுங்கில் சில படங்கள் நடித்தார். பிறகு படவாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டிய ப்ரியாமணி சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் நடித்திருந்தார். ஜவான் படத்திற்கு பின் படவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை பிறந்திருக்கிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சில விஷயங்கள் ஓபனாக பேசிருந்தார்.
பேட்டியில் பேசிய ப்ரியாமணி “சினிமாவில் நான் நடித்துக் கொண்டிருப்பதற்கு என் கணவர் தான் காரணம் அவரால் தான் நான் இன்றும் நடிகையாக வலம் வர முடிகிறது”
எனக்கு வயது 39 எனவே என்னை அனைவரும் பாடி ஷேமிங் செய்வார்கள். அதை பற்றி எனக்கு கவலை இல்லை நான் இப்போதும் ஹாட்டாகத்தான் இருக்கிறேன்” என்றார்.
-கெளசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..