‘அண்ணாத்த’ தீம் மியூசிக்: இமான் வெளியிட்ட தெறி வீடியோ

ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு இசையமைக்கும் இமான், அப்படத்தின் தீம் மியூசிக் உருவாக்கப்பட்ட வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில், நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக இதில் இடம்பெற்றிருந்த பின்னணி இசை செம மாஸாக இருந்தது.

இந்நிலையில், ‘அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டரில் இருந்த தீம் மியூசிக் உருவானதை, வீடியோவாக தனது டிவிட்டர் பக்கத்தில் டி.இமான் வெளியிட்டுள்ளார். ரஜினி படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘முத்தம் கொடுக்காதீர்கள்’ எச்சரிக்கும் பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து!

‘களத்திலேயே கெட்டவார்த்தையில் பேசிய கேப்டன் கோலி’ வைரலாகும் வீடியோ உள்ளே