“மும்மொழித் திட்ட திணிப்பு..” கெட் அவுட் செய்திட உறுதியேற்போம்..!! தவெக தலைவர் விஜய்..!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியினை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் துவங்கி வைத்தார். அதன் பின்னர் முதல் மாநில மாநாட்டை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். அதில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று அக்கட்சியின் முதல் ஆண்டு விழா சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவினையொட்டி விழா மேடைக்கு வந்த விஜய்க்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து, புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்ட திணிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராடி GetOut செய்திட உறுதியேற்போம் என தவெக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கட்சியின் தலைவர் விஜய் முதல் கையெழுத்திட்டார்.
இவ்விழாவில் ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் மற்றும் தவெக நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் பேசிய அவர், மும்மொழி கொள்கையை செயல்படுத்தாவிட்டால் கல்வி நிதியை தரமாட்டோம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதை சுட்டிக்காட்டி மாநில அரசுக்கு கல்வி நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்றும், இதனை விடுவிக்காமல் இருப்பது மாநில அரசின் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை திணித்தால் எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..