நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் முக்கிய செய்திகள்…!!
ஈரோடு கருந்தேவன் பாளையம் அல்-அமீன் என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் தலைவர் ஹசன் அலி தலைமையில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் கே.எம்.அபுல் ஹசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 260 மாணவ -மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தங்களுக்கு வழங்கவேண்டிய வீட்டுமனை பட்டாக்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி மாற்று தறனாளிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தர்ணா போராடடத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலம் கிராமத்தை சேர்ந்த ரீனா தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி ரீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் வேதனையடைந்த மாணவியின் உறவினர்கள் அப்பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் 15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடியேசித்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் வாக்களிப்பதின் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் சி.எஸ்.ஐ பேராயத்தின் பொன் விழா கொண்டாட்டம் பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் துவங்கியது. முன்னதாக கொடியேற்றப்பட்டு நன்றி வழிபாடு துவங்கியது. இதில் பேராயர் மற்றும் ஆயர்கள் கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு பேராயத்தின் நல்ல செயல்களுக்கு பாராட்டை தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..