நீங்கள் பார்க்க மறந்த முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
மயிலாடுதுறை மாவட்டம் :
மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன் பின்னர் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரெட்டிபாளையம் தாட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் கழகத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் :
புதுக்கோட்டை மாவட்ட முக்காணிப்பட்டி வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 600 காளைகள் 450 மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டு காளைகளை அடக்கும் சிறந்த காளையர்களுக்கு முதல் பரிசாக டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தையும், சிறந்த மாட்டிற்கு டிவிஎஸ் எக்ஸெல் மற்றும் சைக்கிள்களை பரிசாக வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உலக நாதநாராயண சாமி அரசினர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இந்திய அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கலந்து கொண்டு இன்றைய தலைமுறையினர் புதிய நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் யுக்தியை கையாண்டு புதிய கருவிகளை உருவாக்கி மேட் இன் இந்தியா என நமது நாட்டின் பெயரை பதிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன கொம்மேஸ்வரம் பகுதியில் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகள் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேயேற்ற வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். பாலாற்றில் செல்லும் வெள்ளை நீரை தேக்கி வைத்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..