தமிழகத்தில் தொடரும் இந்தி திணிப்பு..!! திருமுருகன் காந்தி அறிவிப்பு..!!
தமிழகத்தில் தொடர்ந்து பாஜக இந்தி திணிப்பில் ஈடுபட்டால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என மே பதினேழு இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை மூலகொத்தளம் பகுதியில் அமைந்துள்ள தாளமுத்து, நடராஜர் நினைவிடத்தில் மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு மே பதினேழு இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமுருகன் காந்தி கூறுகையில், தமிழ் மொழிக்காக பாடுபட்டு உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்காக இன்று வீரவணக்க அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் தொடர்ந்து இந்தி திணிப்பு என்பது நடந்து கொண்டே தான் இருக்கிறது. செல்போனில் ஆரம்பித்து அனைத்திலும் இந்தி திணிப்பு உள்ளது. தமிழக மக்களிடம் வரியை வாங்கி கொண்டு தமிழக மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இந்தியிலும், சமஸ்கிருதத்திலே உள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து இந்தி திணிப்பு நடந்தால் அதனை எதிர்த்து மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்குவோம் என அவர் தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..