தீராத காதலில்.. தேவையா..? காதலர்களின் தவிப்பு இதுவா..?
பத்துக்கு எட்டு என்ற அளவில் பெரிய மரக்கதவு. இரண்டு சில்வர் கைப்பிடிகள்… கைப்பிடிகளுக்கு மேல் வெளியில் இருப்பவர்களின் முகம் மட்டும் தெரியும் அளவுக்கு பதித்த ஒரு கண்ணாடி…
மூன்றாம் ஆண்டு வகுப்பறை… எப்போதும் தாமதமாக வருவது தான் அவன் வாடிக்கை. முதல் அவர் கிளாஸ் ஆரம்பித்திருக்கும், அரை பக்கம் நோட்ஸ் எழுதியிருப்போம்…
லேட் கம்மர்ஸ் ஒவ்வொன்றாக வருவார்கள். கதவுபக்கம் அவன் தலை தெரியாதா என மனசு பரத நாட்டியம் ஆடும்…
முதல் தலை தெரியுது… அடடா பையன் இல்லை அது, ஹாஸ்டல் பொண்ணுங்க நாலு பேரு லேட்டா வராங்க..
அடுத்த batch தலை தெரியுது… அடுத்த செட்டு late comers. அதுலயும் அவன் இல்லை… ஐ அடுத்த இரண்டு gang வருது.. ஆனால் தலைவன் அதுலயும் இல்லை…
சரி பையன் இன்னைக்கு லீவ் போல. அப்பறமா மெசேஜ் பண்ணி விசாரிப்போம் என கிளாஸ் கவனிக்கத் தொடங்கும் போது… திடீரென மரக்கதவு திறக்க தலைவன் உள்ளே வரான்.
ஆள் தேடி பரத நாட்டியம் ஆடிய மனது இப்போ குச்சிப்புடி கதக்களி என எல்லாம் சேர்த்து ஆடும்..
என்னை கடந்து பின் இருக்கையில் அவன் அமரச் செல்லும் போது முகத்தில் ஒரு குளிர் காற்று அடிக்கும்.. எனக்கு மட்டுமே ஒரு பீத்தோவென் சிம்பொனி கேட்கும்.. ஏற்கனவே எண்ணெய் போட்டு சப்பையாக வாரி எங்கேயும் பிசிரில்லாத காதோர முடியை மீண்டும் மீண்டும் காதுக்கு பின் ஒதுக்கும் சாக்கில் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்துக் கொள்வது தினம் நடக்கும் வாடிக்கை.
ஒருமுறை என் பின்னாடி அமர்ந்தவன் என் தோள் மீதிருந்த துப்பட்டாவை ஒரு விரலால் சுரண்டி என்னை கூப்பிட்டான். (ஆஹா எதுக்கு தொடுறான்…)
சந்தோஷ் : “ஹே… Power drives ரெகார்ட் முடிச்சுட்டியா..? நோட் தர்றியா எழுதிட்டு தரேன்.”
சந்தியா : (மூஞ்ச serious ஆக வச்சுக்கிட்டு ) ம்ம்.. இந்தா லஞ்ச் ப்ரேக் ல திருப்பி குடுத்துறனும்.
சந்தோஷ் : “ஓஹ் ஓகே மேடம்!”
சந்தியா : இன்னிக்கும் மதியத்துக்கு அப்புறம் லேப் இருக்கே. இன்னிக்கு ரெகார்ட் நோட் முடிச்சிட்டு வந்துருப்பானா..? முடிக்காமல் வந்துருக்கட்டுமே… என்கிட்ட தானே கேப்பான்.. மறுபடியும் தோள் மேல குறுகுறுன்னு சுரண்டி என்னைய கூப்பிடுவான் ல.
மனசு சிறகடிக்குமே… அய்யோ ஈஸ்வரா…. ஏன் அவன் சின்னதா தொடுறது கூட இவளோ புல்லரிப்ப குடுக்குது… கண்ண பாத்து பேசுனா மட்டும் பதட்டம் ஆகுதே.
ஒருவேளை இதான் காதலோ..? Crush ஆக இருக்குமோ? அவனுக்கும் இப்பிடி லாம் இருக்குமா? இருக்காது.. அவனுக்கு ஏற்கனவே நெறய பொண்ணுங்க பிரண்ட்ஸ். நம்மகிட்டயும் friendly ஆ தான் இருக்கானோ… இல்லையே.., ராத்திரி பூரா நம்மகிட்ட தான பேசிட்டு இருக்கான்…
Love u சொல்றான்.. நீ தான் என் best friend ன்னும் சொல்றான். கேட்டா friends தானங்குறான். எல்லாமே எப்படி friendly ன்னு எடுத்துக்க முடியும்?
ஒருவேளை எல்லா பொண்ணுங்க கிட்டயும் இப்பிடித்தான் பேசுவானோ… ச்சே ச்சே இருக்காது… நம்ம தான் ஸ்பெஷல் ஆச்சே. நம்ம ஆள நம்மலே சந்தேகப் பட்டா எப்படி..?
சந்தியா mind voice : தோள் மீது ஒரு விரல் குறுகுறுவென சுரண்டிய உணர்வு… (ஆஹா கூப்டுறான்)
சந்தோஷ் : “ஹே ஐம் நாட் ஃபீலிங் வெல். தலைவலியா இருக்கு. அந்த data structures book மட்டும் எனக்கும் சேர்த்து ஸ்பைரல் பைண்ட் பண்ணி வைக்குறியா..? நான் இவ்னிங் இல்லன்னா நாளைக்கு வாங்கிக்கிறேன்.”
சந்தியா : ஒஹ் சரி டா. பாத்து போ. டேக் கேர்.
மாலை : ஜெராக்ஸ் கடையில்
சந்தியா : அண்ணா … ரெண்டு copy வேணும். போட்டுட்டு சொல்லுங்க”.
பேசாம book குடுக்குற சாக்குல அவன வீட்டுக்கே போயி பாத்துருவோமா..? தலைவலின்னு சொன்னானே. என்ன பன்றானோ.. நம்ம கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ.. சொல்லாம கொள்ளாம வீட்டு முன்னாடி போயி நின்னா நல்லாவா இருக்கும்..? அவங்க அம்மா இருந்தா என்ன பண்றது..? சரி ஃபோன் பண்ணி பாப்போம்
(அரை மணி நேரமாக கால் வெயிட்டிங்)
தலைவலின்னு சொல்லிட்டு இவன் இவளோ நேரமா யார்கிட்ட பேசுறான். ஒருவேளை ஷீலாவா இருக்குமோ..? இல்லை பிரீத்தி? ச்சீ எனக்கு ஏன் தான் இப்பிடி தப்பு தப்பா தோணுது…
இந்த காயத்ரி வேற ரொம்ப நேரமா கடையோரமா நின்னு யார்கிட்டேயோ phone ல கடல போட்டுட்டு இருக்காளே.. அவனா இருக்குமோ.. நேத்ராவும் phone ல பேசுறா.. அவன்ட்ட பேசுறாளா என்ன… ஓவரா சிரிச்சுட்டு சிணுங்கி சிணுங்கி பேசுறாளே.. இப்பிடி மடியில நெருப்ப கட்டிட்டு இருக்குறக்கு அவன லவ் பண்ணாம இருக்கிறதே மேல்.
(ஒரு மணி நேரம் கழித்து)
சந்தியா : டேய் எவ்ளோ நேரமா phone பண்றது.. இப்போதான் கால் பண்ண டைம் கெடச்சதா உனக்கு..? எப்போ பாரு கால் வெயிட்டிங்னு வருது. உன்னோட data structures புக் ரெடி ஆயிடுச்சு.
சந்தோஷ் : ஹே.. thanku so much… And sorry de.. நேத்ரா கூப்பிட்டிருந்தா… அவளுக்கும் கிட்டார் கிளாஸ் போகனுமாம். அதுக்கு என்கிட்ட கேட்டுட்டு இருந்தா…
சந்தியா : ம்ம் சரி சரி, நான் உன் வீட்டுக்கு வந்து புக் குடுத்துட்டு போறன்.
சந்தோஷ் : ஹே டென்ஷன் ஆவத மா. எனக்கு இன்னும் head ache ஆ தான் இருக்கு. அவ தான் பேசிட்டே இருந்தா.. நீ புக் லாம் எடுத்துட்டு கஷ்டப்பட்டு வர வேணாம். நான் நாளைக்கே வாங்கிக்கிறேன்.
சந்தியா : நான் உன் வீட்டு கீழ தான் இருக்கேன்.
(இந்த பசங்களே இப்படித் தான். ரெக்கார்ட் நோட்டு, spiral binding ன்னு வேலை செஞ்சு குடுக்க நான் வேணும், கடல போட நேத்ரா கேக்குதோ. Love u, kiss u, baby, இந்த ஈர வெங்காயம் எல்லாம் சும்மா… எல்லார்கிட்டயும் இப்பிடித்தான் பேசுவான்.. புக் eh மூஞ்சி மேல போட்டுட்டு திரும்பிப் பாக்காம நடக்கணும். சாவட்டும்… ச்ச்சே what a fool I am…)
சந்தோஷ் : சரி சந்தியா உன் கிட்ட ஒன்னு கேட்கணும், நான் ஏன் எதாவது பொண்ணுகிட்ட பேசுனா Possesive ஆகுற..,
சந்தியா : நான் எங்க Possesive ஆனான்.
சந்தோஷ் : அதான் உன் முகமே சொல்லுதே., சரி உன் கிட்ட ஒன்னு சொல்லணும்.
சந்தியா : ம்ம்ம் சொல்லு
சந்தோஷ் : நான் ஏன் உன்ன ஏன் வீட்டுக்கு வர சொன்னன் தெரியுமா..?
சந்தியா : நோட்ஸ் குடுக்க..
சந்தோஷ் : இல்லை என் அம்மா அவங்க மருமகள பாக்கணும் சொன்னங்க அதான்..
சந்தோஷின் காதலை மறுக்காமல் ஏற்றுக்கொண்டால் சந்தியா…
ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பு முதலில் அவர்கள் மீது Possesive உணர்வு வர தூண்டும்.., ஆனால் அவர்கள் மீது நாம் வைக்கும் அன்பு அனைத்தையும் மாற்றிவிடும்.., தீராத காதலில் தயக்கங்கள் தேவையா..?
-வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..