தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா “லேடி சூப்பர் ஸ்டார்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது அட்லி இயக்க வரும் இந்தி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சிம்பு, பிரபுதேவா என மாறி, மாறி காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும், திரையுலகில் 20 ஆண்டுகளாக ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் நயன்தாரா திரை வாழ்க்கையை மட்டுமல்ல சொந்த வாழ்க்கையையும் மாற்றியது.
இந்த படம் மூலமாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா இடையே மலர்ந்த காதல் 6 ஆண்டுகளைக் கடந்து திருமணத்தில் முடிந்தது. கடந்த ஆண்டு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணமான நான்கே மாதங்களில் நயன் – விக்கி இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆனதாக சோசியல் மீடியாவில் அறிவித்தனர். திருமணமான சில மாதங்களிலேயே குழந்தை பிறந்தது எப்படி? என சர்ச்சை கிளம்பிய நிலையில், வாடகை தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்றது தெரியவந்தது.
இந்த சர்ச்சை தீயாய் கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், நயன் – விக்கி விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக வதந்தி பரவியது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன் முறையும் நயனும் – விக்கியும் ஆளுக்கொரு இரட்டை குழந்தைகளை தூக்கிக்கொண்டு விமான நிலையம் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அம்மா நயனும், அப்பா விக்கியும் தங்களது குழந்தைகளின் முகத்தை யாரும் பார்த்துவிடக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதற்காக பொத்தி, பொத்தி எடுத்துச்செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
https://twitter.com/NayantharaFCK/status/1633474960634286080