மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்..! கண்ணீர் வடித்த ராணுவ வீரர்..!
இந்நிலையில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த வஞ்ச நெஞ்சம் கொண்ட இளைஞர்கள் குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.., அதுமட்டுமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஆளாக்கப்பட்ட பெண் என் மனைவி தான் என்று ராணுவ வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். நாட்டிற்காக எங்கள் உயிரை பணைய வைத்து நாங்கள் இங்கு இருக்கிறோம். ஆனால் எங்கள் வீட்டிற்கே பாதுகாப்பு இல்லை என்ற கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த மே 4ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது, ஆனால் தற்போது தான் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அதற்கு மனித உரிமை ஆணையம் மற்றும் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி, நடுவீதியில் இழுத்துச் சென்ற போது, அந்த பெண்ணின் தந்தை காப்பாற்ற வந்துள்ளார், காப்பாற்ற வந்த தந்தையை அடித்தே கொன்றுள்ளனர். அதை தட்டி கேட்ட பெண்ணின் சகோதரனைக் நடு ரோட்டில் சுட்டு கொன்று குவித்து அந்த கொடூர சம்பவத்தை, வீடியோவாக வெளியிட்டுள்ளனர். வீடியோ வெளியாகி இரண்டரை மாதங்களாக வாய் திறக்காத பிரதமர், ‘இது 140 கோடி இந்திய மக்களின் அவமானம்’ என்று தற்போது தெரிவித்திருக்கிறார்.
ஆம், தரகு முதலாளித்துவ அடிமைகளும், மதவெறி, இன வெறியைத் தூண்டிவிட்டு, பாசிச கொள்கைகள் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, பெண்களை நிர்வாணமாக்கி, சிறுமிகளை எரித்து, விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொலை செய்து, பழங்குடிகளை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றும் வெறுப்பரசியல் கும்பலை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்திருப்பதற்காக நாங்கள் நிச்சயம் அவமானப் படத்தான் வேண்டும். இது எங்களின் அவமானம்தான் என்று தெரிவித்திருக்கிறார்..,