மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செய்து இன்று காலை சாமி தரிசனம் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரர் கோவிலில், தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தர்மபுரம் ஆதித்தனாருக்கு சொந்தமான கோயிலாகும்.
இந்த கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிட்டால், தீராத நோய்களும் தீரும் என சொல்லப்படுகிறது.
இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு, ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று. தென்மாவட்ட பக்தர்கள் பாதயாத்திரை செய்வது வழக்கம்.
முதல் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் இந்த யாத்திரையை அடுத்த செவ்வாயில் வைத்தீஸ்வரன் கோவிலை சென்றடைவது வழக்கம்.
அனால் இந்த ஆண்டு மதுரை, தேனீ, திருச்சி, திண்டுக்கல், சேலம் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை செய்துள்ளனர். மேலும் வைத்தீஸ்வரருக்கு, சீர்களை மாட்டு வண்டியில் அனுப்பியும் உள்ளார்கள்.
பின் கோவிலை வந்தடைந்த பக்தர்கள். தையல்நாயகிக்கு சீரை நேர்த்தி கடனாக செலுத்திவிட்டு, வைத்தீஸ்வரரை தரிசனம் செய்ததாகவும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.