ஒரே நாளில் சென்னையில்..? மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
நேற்று தீபாவளி என்பதால் நகரம் முழுவதும் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மாசு காற்று அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி வாரியம் தெரிவித்துள்ளது.
இதுவரை 100 டன் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில்.., 200 டன் குப்பைகள் வரை அகற்றக்கூடும் எனவும் சென்னை மாநகராட்சி வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசு கழிவுகள் குவிந்துள்ளதால்.., அதை அகற்றுவதற்காக 19,600 தூய்மைபணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த குப்பைகளை கொண்டு செல்வதற்காக மண்டலதிற்கு இரண்டு குப்பை வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன..
இந்த அனைத்து குப்பைகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு.., கும்மிடிபூண்டியில் உள்ள தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்படும் எனவும் துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..