தமிழக வெற்றிக் கழக மாநாடு வெற்றி பெற கிடா வெட்டி விருந்து..!
மாநாடு வெற்றி பெற வேண்டி தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் அணி நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்து கிடா விருந்து நடத்தினர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சி தொடங்கி முதல் அரசியல் மாநாடு வருகிற 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெறவுள்ளது.
இந்த மாநாடுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேனியில் மாநாடு வெற்றி பெற வேண்டி த.வெ.க நிர்வாகிகள் கிடா வெட்டி விருந்து வைத்து உணவுகளை பரிமாறினார்கள்.
முன்னதாக தேனி அன்னஞ்சி அருகே உள்ள ஈஸ்வரன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் அணி பொறுப்பாளர் பிரகாஷ் தலைமையில் கட்சி கொடியுடன் மாநாடு வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆடு, கோழி, கிடா வெட்டி விருந்து வைத்தனர், இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.