தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டாங்களில் ஆட்சியர்கள் ஆய்வு..! 20 லட்சம் பேர்..!
தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனை அம்மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
TNPSC :
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் TNPSC குருப்-4 தேர்வை கண்பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதை சரியாக நடக்கிறதா என மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை வாலாஜா :
அதேபோல் வாலாஜா அரசு பள்ளியில் தமிழ்நாடு அரசு குரூப் 4 தேர்வு எழுதும் மையத்தில் 25 ஆயிரத்து 994 மாணவ மாணவிகள் 99 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வு பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் :
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு மையத்தினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதில் தேர்வாணையத்தின் தேர்வு பணியில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் :
வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 36 ஆயிரத்து 705 பேர் தேர்வினை எழுதியுள்ளனர். இந்நிலையில் வேலூர் ஈ.வெரா நாகம்மையார் பள்ளி தேர்வு மையத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பார்வையிட்டார்.
அதேபோல் காட்பாடி, அனைக்கட்டு, கேவிக்குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு தேர்வு மையங்களை முதன்மை கண்காணிப்பாளர்களும் 130 தேர்வு கூட ஆய்வு அலுவலர்களும் அடிப்படை வசதிகளும் சரியாக செய்யப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொண்டனர்.
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 121 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 970 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த நிலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வு நடைபெறும் வாலாஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு பெண் தேர்வாளர் கால தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்காததால் பெண்ணின் உறவினர்கள் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த தேர்வு மையத்தில் மட்டும் பரபரப்பு ஏற்பட்டது.