கூந்தலுக்கு வெற்றிலை இவ்ளோ பண்ணுமா..!
கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் இதற்கு வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
தலையின் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இது முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துகளை கடத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
வெற்றிலையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இதனை அரைத்து தலையில் போடுவதினால் பொடுகு மற்றும் தொற்றுநோய்களில் இருந்து விடுபடலாம். இதனால் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
முடியில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் அதனை முடியில் பயன்படுத்துவதினால் வெளியில் இருக்கும் தூசுகளில் இருந்து முடியினை பாதுகாத்து தலைமுடியை பளப்பளப்பாக வைத்திருக்க உதவும்.
தலைமுடியை கண்டிஷனராக வைத்திருக்க மார்க்கெட்டில் பலவிதமான ஷாம்பு பயன்படுத்துகிறோம். ஆனால் வெற்றிலை இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது.