சரும பிரச்சனைகளை தீர்க்க இது ஒன்று போதும்..!
கார்போக அரிசியானது ஆயிர்வேத மருத்துவத்தில் முக்கியமான ஒரு தாவரமாகும். இது 3 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒரு செடி வகையாகும். இது சத்தான மண்ணில் செழித்து வளரக்கூடியதாகும்.
இதன் ஒரு கிளையில் 8 முதல் 12 பூக்கள் பூக்கும். இதனுடைய விதைகள் அதிகமான பலனை தரக்கூடியது ஆனால் இதல் இலை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவ குணம் பெற்றது. கார்போக அரிசிக்கு சோமவள்ளி, குஷ்டநாசினி என மற்ற பெயரும் உண்டு.
கார்போக அரிசியில் செரோலின் மறும் ஐசோ செரோலின் உள்ளது. கார்போக அரிசியானது விட்டிலிகோ, லூகோடெர்மா என்ற சரும வியாதிகளை எதிர்த்து போராடுகிறது. கடந்த காலங்களில் சீனாவிலும் இந்தியாவிலும் இதன் எண்ணெயை தேய்த்து சரும வியாதிகளை குணப்படுத்தினார்கள்.
கார்போக அரிசியின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதன் பழம் வாந்தி, ரத்த சோகை, மூலம், முடி வளர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இந்த அரிசியின் பொடியானது புற்றுநோய், பூஞ்சைகள் போன்ற கிருமிகளை அழிக்க உதவுகிறது.
இந்த பொடியை 2 கிராம் எடுத்து அதில் மஞ்சள்தூள் மற்றும் தேன் கலந்து சாப்பிட வயிற்றில் பூச்சுகள் வராமல் தடுக்கலாம். கார்போக அரிசியின் எண்ணெயானது யானைக்கால் நோய், இருதய நோய், வெண் குஷ்டம், எய்ட்ஸ், குஷ்டம் ஆகிய நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.
கார்போக அரிசியில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கிறது. இந்த அரிசியில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலின் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கார்போக அரிசியுடன் கஸ்தூரிமஞ்சள், நீரடிமுத்து, கோரைகிழங்கு, அகில் கட்டை, சந்தனத்தூள், தேவதாரு, வெட்டி வேர், குருவி வேர் ஆகிய பொருட்கள் அனைத்தையும் சம பங்கு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, குளிக்கும்போது குழைத்து உடம்பில் தேய்த்து 5 நிமிடங்களுக்கு ஊறவைத்து குளித்து வர சொறி, சிரங்கு, படை, நமைச்சல் போன்ற சரும வியாதிகள் அனைத்தும் மறைவதை காணலாம்.
