எல்லாருக்கும் பிடித்த செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு..!
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 8
எண்ணெய் – 1/2 கப்
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது )
பூண்டு – 6 (நசுக்கியது )
தக்காளி – 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
புளிச்சாறு – 1/4 கப்
தூள் வெல்லம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு
தண்ணீர்
மசாலா பேஸ்ட்:
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 3 தேக்கரண்டி
புளிச்சாறு – 3 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்
செய்முறை:
சமமான அளவில் ஐந்து கத்தரிக்காயை எடுத்து சுத்தம் செய்து காம்புடனே நடுபகுதியில் இருந்து நான்கு பாகமாக வெட்டிக் கொள்ளவும்.
மஞ்சள்தூள்,மல்லிதூள்,மிளகாய்த்தூள்,உப்பு,புளிச்சாறு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயாரித்துக் கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள கத்தரிக்காயில் மசாலாவை நடுவில் வைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் தடவி சூடானதும் மசாலா கத்தரிக்காயை பொரித்துக் தனியே எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலில் கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை,வெங்காயம் ஆகியவற்றை வதக்க வேண்டும்.
பின் அதில் பூண்டு,தக்காளி ஆகியவற்றை வதக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, புளிச்சாறு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் வறுத்த கத்தரிக்காயை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக பொடித்த வெல்லத்தை சிறிது சேர்த்து கலக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.