“மா மதுரை விழா” முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கம்..!!
மதுரையில் 4 நாட்கள் நடைபெறும் மா மதுரை விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மதுரையில் இன்று முதல் 11-ம் தேதி வரை 4 நாட்கள் மா மதுரை விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தொல்லியல் பயணம், மதுரை கலைத் திருவிழா, இரட்டை அடுக்கு பேருந்து பயணம், பலூன் திருவிழா, உணவு திருவிழா, வானவேடிக்கை நிகழ்ச்சி, கிரிக்கெட், கால்பந்து போட்டி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.
மா மதுரை விழாவை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. அப்போது அவர் பேசியதாவது..
இந்தியாவின் பழமையான நகரம் மற்றும் புகழ்பெற்ற நகரங்களில் மதுரையும் ஒன்று. தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட ஊர் “மதுரை”. மாபெரும் பண்பாட்டு விழாவாக “மதுரை சித்திரை திருவிழா” நடைபெறுகிறது.
1866-ம் ஆண்டு நகராட்சியான ஊர் மதுரை, சென்னைக்கு அடுத்தபடியாக மாநகராட்சி ஆன ஊர் மதுரை., சென்னைக்கு அடுத்த 2-வது மாநகராட்சியாக கலைஞர் கருணாநிதி. 1971-ல் மதுரையை மாற்றினார்.
மேலும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட இந்திர விழாவைப்போல இந்த விழா நடைபெறும். வரலாற்றை போற்றுவோம், வைகையை போற்றுவோம், மதுரையை போற்றுவோம் என விழாக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல் பண்பாட்டு விழாவாக நடத்தப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..