கோடையில் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க..! குறிப்பு -1
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த வகையான உணவுகளை கொடுக்கலாம்.
தர்பூசணி : 92% வரை நீர்ச்சத்து கொண்ட ஒரு உணவு, இதில் வைட்டமின் எ, வைட்டமின் பி, ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலுக்கும் சருமத்திற்கும் ஆரோக்கியம் கொடுக்கிறது. 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயை வாரத்தில் மூன்று முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும். செரிமான அமைப்பை சீராக்கவும். மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. 1 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இளநீர் : உடலுக்கு தேவையான நீர்ச்சத்து தருவதோடு, வெப்பநிலையை ஒழுங்குப்படுத்தி உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கிறது.
மேலும் சிறுநீர் பிரச்சனையை சரி செய்கிறது. 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கலாம்.
ஆரஞ்சு : 80 % வரை, நீர்ச்சத்து கொண்டது, தினமும் ஒரு ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது.
6 மாதத்தில் இருந்து 1 வயது வரை ஆன குழந்தைக்கு 3 ஸ்பூன்க்கு மேல் ஆரஞ்சு ஜூஸ் கொடுக்ககூடாது.
அன்னாசிப்பழம் : 88% வரை நீர்ச்சத்து கொண்ட இந்த பழம், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
மேலும் செரிமானத்திற்கு உதவும். 6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நன்கு மசித்து கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.