அதிகரித்த போதைப்பொருள் புழக்கம்..!! தமிழக அரசு அதிரடி..!!
ஈரோடு மாவட்டத்தில் நேற்று “தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பு” சங்கத்தினர் சார்பில் போதை பொருள் புழக்கத்தை ஒழித்து.., போதைப்பொருள் இல்ல தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
அதன் பின் 2 மணி நேரத்தில் மாரத்தான் போட்டி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.., அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம்.., பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்..
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியதாவது., திமுக ஆட்சி அமைந்தபின், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 32 ஆயிரத்து 404 கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்த கடைகள் மற்றும் போதை வஸ்துகள் இருப்பது கண்டறிந்து, 20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 478 மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் 17 ஆயிரத்து 481 கடைகளுக்கு சீல் வைத்து 33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..