மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மேலும் 200 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்துக்கு சென்றுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தமிழகத்தில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஜனவரி மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் விலை சரிந்து வந்தது. இந்நிலையில், இன்று விலையேற்றம் மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையில் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 898 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 184 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 49 புள்ளி 90 காசுகளாகவும், கட்டிவெள்ளி 49 ஆயிரத்து 900ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

What do you think?

தொடரும் சோகம்; கொரோனா வைரஸ் பலி 717 ஆக அதிகரிப்பு!!!

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சிறுவன் கொடுத்த புகார் வாபஸ்!!!