அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்…!! 6 பேர் அதிரடி கைது..!!
திருப்பூரில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 6 பேர் கைது. போதை பொருட்கள் ஊசிகள் பறிமுதல்.
திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் திருப்பூர் வடக்கு போலீசார் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
பெருமாநல்லூர் சாலை புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்குரிய முறையில் ஐந்து பேர் தங்கி இருந்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து ஐந்து நபர்களையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மதுரையை சேர்ந்த அசோக் (32) என்பவர் பெங்களூரில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் என்ற வலி நிவாரணி மருந்துகளை வாங்கி வந்து திருப்பூரில் உள்ள தனது நண்பர்களான தினேஷ்குமார், ரங்கராஜ், மணிகண்டன், சதீஷ்குமார், ரமேஷ் என 5 பேருடன் சேர்ந்து தனியார் விடுதியில் அரை எடுத்து மெத்தபெட்டமைன் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
ஆறு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போதை பொருட்களையும் அதற்கு பயன்படுத்திய ஊசிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குறிப்பிட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை போன்ற சமயங்களில் மட்டுமே பயன்படுத்தும் வலி நிவாரணி என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..