மூவர்ண பலூன் (ம) புறாக்களை பறக்கவிட்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்..!!
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தேசியக் கொடியை ஏற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது …
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதனையடுத்து தேசியத்தை நினைவு படுத்த வகையில் மூவர்ண பலூன்களை பறக்க விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சார்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 45 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மேலும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களுக்கு சிறந்த பணியாளருக்கான பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வழங்கினார்.
அதேபோல் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். உலகெங்கும் சமாதானம் நிலவும் வகையில் வெண்புறாக்களை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் பறக்க விட்டனர்.
இதனையடுத்து தேசியத்தை நினைவுபடுத்த வகையில் மூவர்ண பலூன்களை பறக்க விட்டனர். மேலும் விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 84 பயனாளிகளுக்கு 3 கோடியே 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தேசப்பற்றை விளக்க வகையில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் முழுவதும் 78 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மாநகராட்சி கட்டிடம் முழுவதும் மூவர்ண விளக்குகளால் மிளிர்கிறது.
வேலூர் கோட்டையின் அருகில் உள்ள காந்தி சிலைக்கும் வண்ணவிளக்குகளால் அலங்காரம் செய்துள்ளனர் 78 ஆவது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ் மகேஸ்வரன் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் அரசுத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன மேலும் இவ்விழாவில் அரசு துறை அதிகாரிகள், தியாகிகள், பொதுமக்கள், மாணவ மாணவியர் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர், தீயணைப்பு துறையினருக்கு, மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார்…
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மூவர்ண தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்முன்னதாக இந்திய நாட்டிலேயே முதன்முறையாக ராணிப்பேட்டையில் நிறுவப்பட்ட அண்ணல் மகாத்மாகாந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..