சவாலை இந்தியா எதிர்கொண்டு வென்றது..! மோடி பெருமிதம்..!
லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. அந்த தேர்தலில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது.
பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்ற போதிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியுடன் தற்போது ஆட்சி அமைக்கவுள்ளது.
இதற்கிடையில் இன்று டெல்லியில் என்டிஏ கூட்டணியின் தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மக்களவை தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைப்பது குறித்து உரிமை கோரியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், அவர் ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கிறார். இதற்கிடையே குடியரசுத் தலைவர் இல்லம் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, என்டிஏ கூட்டணி வலுவான அரசை அமைக்கும் என்றார்.
மேலும், 18வது மக்களவை ஒரு புதிய தொடக்கத்தை விதித்துள்ளது, மேலும் எனக்கு 3வது முறையாக பிரதமராக பதவி கொடுத்த மக்களுக்கு நன்றி. என்றும் ஜூன் 9ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.
10 ஆண்டுக்கால அனுபவத்தைக் கொண்டு மேலும் வளர்ச்சியை எட்டுவோம் என்ற அவர், அதே உற்சாகத்துடன் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றும் உலகம் நெருக்கடியைச் சந்தித்த நிலையில், சவாலை இந்தியா எதிர்கொண்டு வென்றது என்றும் சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்ட போதிலும் நமது பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..