LoveLove

‘கொரோனாவால் சீன பொருளாதரத்திற்கு வந்த சோதனை’ இந்தியாவுக்கு அடித்த Luck !

சீனாவில் தற்போது பொருளாதாரம் மந்தமான நிலையை அடைந்துள்ளதால் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரானா வைரஸ் தொடங்கியா சீனாவில் தற்போது பொருளாதாரம் மந்தமான நிலையை அடைந்துள்ளது. அத்துடன்
அங்கு ஏற்கனவே இறக்குமதி செய்த கச்சா எண்ணெயும், திரவ இயற்கை எரிவாயுவும் பெருமளவு இருப்பு உள்ளதால், புதிய கச்சா எண்ணெய்களை இறக்குமதிகளை செய்ய முடியாத நிலையில் அது உள்ளது.

இது இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆம், உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவுக்கு இந்த கச்சா எண்ணெயின் விலை குறைவால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

இந்த விலை குறைவு உள்நாட்டு பெட்ரோல்-டீசல் விலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், மத்திய அரசின் நிதி நிலைமையை மேம்படுத்த அது உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

What do you think?

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்!

‘ஈரானில் கொரோனாவால் ஒரே நாளில் 63 பேர் பலி’