இந்தியா என்ன பாஜகவின் சொத்தா..? அவங்க இஷ்டத்திற்கு பெயரை மாற்ற..? ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகல் சதா கேள்வி..?
இந்திய நாட்டின் பெயரை “பாரத” என பெயர் மாற்றுவதற்கு பாஜகவிற்கு என்ன உரிமை இருக்கிறது. என ஆம்.அத்.மி.கட்சி எம்.பி.ராகுல் சதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு வரும் 9,10 தேதி நடைபெற இருக்கிறது.
அதற்கான அழைப்பிதழ் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அரசியல் பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் “இந்திய குடியரசு தலைவர்” என குறிப்பிடாமல் “பாரத குடியரசு தலைவர்” என குறிப்பிட்டுள்ளனர்.
நாடு என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல.., 135 கோடி இந்தியர்களுக்கு சொந்தமானது நாட்டின் அடையாளம் என்பது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல பாஜக விருப்பம் போல மாற்ற என ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகல் சதா கூறியுள்ளார்.
இதே போல் இந்தியா கூட்டணியின் பெயரை பாரத் கூட்டணி என்று மாற்றினால் “பாரத்” என்ற பெயரையும் பாஜக மாற்றுமா? என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 140 கோடி மக்களுக்குச் சொந்தமானது இந்திய நாடு என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..