2-வது டெஸ்ட்: நியூசிலாந்து வெற்றி; தொடரும் இந்தியாவின் ஒயிட்வாஷ்!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 242 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் அரை சதம் அடித்தனர். நியூசியின் ஜெமிசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

விராட் கோலி

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் முஹம்மது ஷமி 4, பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின்னர் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 124 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் கோலி முதல் அணியின் எந்த வீரர்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நியூசியின் ட்ரெண்ட் போல்ட் 4, டிம் சவுதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

132 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதன், டாம் பிலெண்டெல் இருவரும் அரை சதம் அடித்து வெற்றியை எளிதாக்கினர். இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை கெய்ல் ஜெமிசன் பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற டி-20 போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடர், தற்போது நடந்து முடிந்துள்ள டெஸ்ட் தொடர் என இரண்டிலுமே இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது நியூசிலாந்து அணி.

What do you think?

தமிழர்கள் மீட்பு நடவடிக்கை; வைகோவின் கோரிக்கைக்கு அயல் உறவுத்துறை விளக்கம்

ஹரி, சூர்யா, இமான் இது ‘அருவா’ கூட்டணி