‘இறுதி போட்டியில் வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா’ இந்தியாவுக்கு 185 ரன்கள் இலக்கு!

மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில்இந்தியாவுக்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹெய்லி (75) மற்றும் மூனி (78 ) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளும்,பூனம் யாதவ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் தற்போது வரை இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

What do you think?

பிரதமரின் டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் சென்னையை சேர்ந்த சாதனை பெண்!

தம்பியுடன் பிகினி சூட் – சாராவின் வைரல் புகைப்படம்