நியூசிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிரித்வி ஷா, புஜாரா தலா 54 ரன்களும், ஹனுமா விகாரி 55 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி கேப்டன் கோலி இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளும், டிரென் போல்ட், டிம் சவுதி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை எடுத்துள்ளது.

What do you think?

வர்த்தகத்தையும் முடக்கிய கொரோனா!

தெலங்கானா போலீசாரின் நாகினி குத்தாட்டம் – வைரல் வீடியோ