Ind-Nz Test: கோலி ஏமாற்றம்; இந்தியா தடுமாற்றம் – 2வது டெஸ்டிலும் தொடரும் சோகம்

கிறிஸ்டர் சர்ச் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சிலும் இந்திய அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது நாளான இன்று நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக லாதம் 52 ரன்களும், ஜேமீசன் 49 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக முகம்மது ஷமி 4, பும்ரா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்ஸுக்காக களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேப்டன் விராட் கோலி இந்த இன்னிங்ஸிலும் 14 ரன்கள் மட்டுமே ஏமாற்றமளித்தார். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேலும், நியூசிலாந்து அணியை விட 97 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

What do you think?

டெல்லி வன்முறை; 167 வழக்குகள், 885 பேர் கைது!

CAA: கொல்கத்தாவை அதிரவைத்த GoBack Amit Shah