ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, சீனாவின் 142.57 கோடி மக்களையும், இந்தியா 142.86 கோடி மக்களையும் கொண்டுள்ளது. இதுவரை உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவை விட 2.9 மில்லியன் மக்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
இந்தியா மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 18 சதவீதம் பேர் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள், 26 சதவீதம் பேர் 10 முதல் 24 வயது வரை உள்ளவர்கள், 68 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்களில் சதவீதம், 65 வயதுக்கு மேல் 7 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பானது கடைசியாக 2011இல் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் 2021இல் எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கோவிட்-19 காரணமாக தள்ளிப்போனது. எனவே, இந்திய மக்கள்தொகையின் உறுதியான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரியவில்லை. எனவே, பல்வேறு தரவுகளை கணக்கில் கொண்டு இந்த முடிவை ஐநா வெளியிட்டுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை நாடாக விளங்கிய சீனா, கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெறக் கூடாது என சட்டம் இயற்றிய சீனாவில் தற்போது இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கட்டுபாடு காரணமாக மக்கள் தொகையில் சமம் இன்மை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஏதுவாக சட்ட திட்டங்களை சீனா அரசு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.