இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வைத்து தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை வீழ்த்தும் நோக்கில் இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தர்மசாலாவில் வைத்து பகல், இரவு போட்டியாக நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக டாஸ் கூட போடமுடியாமல் போட்டி கைவிடப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று வேதனை அடைந்தனர்.

What do you think?

‘பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துங்கள்’ வெளியுறவுத்துறை அமைச்சகம்!

கொரோனாவால் மூடப்பட்ட தலைநகரம் !