இன்று தொடங்குகிறது இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வைத்து தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை வீழ்த்தும் நோக்கில் இன்று களமிறங்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தர்மசாலாவில் வைத்து பகல், இரவு போட்டியாக நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டிகள் தொடங்குகின்றன.

What do you think?

‘தேசிய ஊடகங்களுக்கு அழைப்பு’ இன்று வெளியாகிறதா ரஜினியின் கட்சி அறிவிப்பு?

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை – அரசியல் திட்டத்தை அறிவித்த ரஜினிகாந்த்!