பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இப்படி தான் இருக்கும்..!! என் ஆர் இளங்கோ பேட்டி..!!
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வார்ரும் திறப்பு விழா பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இந்நிகழ்வில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் சாமிநாதன், திமுகவின் சட்டத்துறை செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான என் ஆர் இளங்கோ கலந்து கொண்டு வார் ரூம் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து பேசிய இளங்கோவன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் வெற்றி பெறக் கூடாது, பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டம் முழுமையாக இருக்காது, தேர்தல் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் ஜனநாயகம் இருக்காது என பேசினார்.
மேலும் அடுத்த தலைமுறைகள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கும் பாரதிய ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஏராளமான சட்டத் திருத்தங்களை செய்துள்ளது அது மட்டுமல்லாது சமஸ்கிருதத்திலும் பெயர் மாற்றம் செய்து மொழி திணிப்பை செய்துள்ளது.
எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..