ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா தனது படைகளை நீக்கியவுடன் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். பின்னர் அங்கு நிறைய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது இதனால் பாதுகாப்பு கருதி அங்கிருக்கும் இந்தியர்களை இந்தியா திருப்பி அழைத்துக்கொண்டது.
இதனால் அங்கு இருந்த இந்தியா தூதர்களும் இந்தியாவிற்கு வந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முடிவிற்கு வந்தது இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் அங்கு இருக்கும் மக்களுக்கு இந்தியா உணவு பொருட்களை அனுப்பி வந்தது. மீண்டும் இந்தியாவுடனான ராஜதந்திர உறவை பெற்றது ஆப்கானிஸ்தான்.
இதனை தொடர்ந்து அங்கு இந்தியா செய்து வந்த உள்கட்டமைப்பு பணிகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக ஆப்கானிஸ்தான் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்தான அறிக்கையில், முந்தய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு தடைபட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கவுள்ளது இந்தியா 20 கட்டமைப்பு பணிகளை மீண்டும் தொடர விருப்பம் தெரிவித்துள்ளது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தால் ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் வறுமை நிலை குறையும் என்றும் அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்